சென்னை - மைசூரு இடையே நவம்பர் 10ஆம் தேதியன்று 5ஆவது வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிலோ மீட்டர் என்றும், 52 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக்கூடியது என்றும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் 3ஆவது மற்றும் 4ஆவது வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் சென்னையில் இருந்து 5ஆவது ரயிலின் சேவை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த ரயில் பெங்களூருவை கடந்து மைசூரு வரை சுமார் 483 கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.